×

கேரளா போல நிலத்தடியில் அமைக்கலாமே: பியுஷ் மானுஷ், சுற்றுச்சூழல் ஆர்வலர்


தமிழகத்தில் எல்லா திட்டங்களையும் கொண்டு வருவது எல்லாம் நம்மை அழிப்பது போன்று தான் உள்ளது. மின்கோபுர திட்டங்கள் தேவை தான். நமக்கு மின்சாரம் வேண்டும். அதே நேரத்தில் விவசாய பூமியை காப்பாற்ற  மாற்று ஏற்பாடுகளை செய்ய வேண்டும். மக்களுக்கு எந்த வித பிரச்சனையும் இல்லாமல், விலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படாமல் பூமிக்கடியில் கேபிள்கள் மூலம் கொண்டு செல்லலாம். ேகரளா மாநிலத்தில் அப்படி செய்யப்படுகிறது. தமிழகத்திலும் அப்படி  நிலத்தடியில் அமைக்கலாமே. ஏன் அப்படி செய்ய முடியவில்லை?  உதாரணமாக கூடங்குளம், மீத்தேன், ஸ்டெர்லைட் ஆலை உள்ளிட்ட கெட்டவைகளை மட்டுமே தமிழகத்திற்கு கொண்டு வருகின்றனர். நல்லவை எதையும் தமிழகத்திற்கு கொண்டு வரப்படவில்லை. தமிழகத்தில் நினைத்ததை செய்வோம் என்ற மனநிலையில் தான் மத்திய அரசு உள்ளது. வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஏதோ ஒரு மாற்றம் வந்தால் தான் தமிழ்நாட்டை காப்பாற்ற முடியும்.

8 வழிச்சாலைக்கு போராட்டம் மக்கள் நடத்தி வருகின்றனர். ஆனால், கணிசமான சதவீதம் மக்கள் 8 வழிச்சாலையை கொண்டு வருவதை ஏற்று கொள்கின்றனர் என்று பொய் சொல்லி வருகின்றனர். ஒரு சிலர் மட்டும் தான்  எதிர்ப்பு தெரிவிக்கின்ற
னர். மக்கள் கருத்தை கேட்கவே மாட்டேன் என்கிற மனநிலையில் தான் அதிகாரிகளும், அரசும் உள்ளது. இப்போது மத்திய அரசு ஆட சொல்வதால் தமிழக அரசு ஆடுகிறது. கேரளா போன்ற மாநிலங்களில் எரிவாயுவை கொண்டு செல்வதற்கான குழாய் பாதை நெடுஞ்சாலையோரம் அமைத்து வருகின்றனர். ஆனால், நமது தமிழ்நாட்டில் மட்டும் விளை நிலங்கள் வழியாகத்தான் அமைக்கப்படுகிறது.  இந்த குழாய் திட்டங்கள் போடும் போதே கவனித்து பார்க்க வேண்டும். இப்படி தான் மின்கோபுரங்களும் அமைக்க முயற்சி செய்கின்றனர்.  மக்கள் எதிர்ப்பு தெரிவித்தால் திட்டத்தை மாற்றாமல், இந்த திட்டத்தை நிறைவேற்றியே ஆக வேண்டும் என்று அரசு முயற்சிப்பது மிகவும் தவறு. இந்த திட்டத்தால் பாதிப்பு என ஆதாரப்பூர்வாக தெரிவித்துள்ள நிலையில், அதற்கு பதிலாக பூமிக்கடியில் கேபிள் பதித்து கொண்டு செல்லலாமே. கஜா புயல் பாதிப்பின் போது, அந்த மாவட்ட பகுதிகளில் ஒரு மின் கம்பம் கூட இல்லை.

அனைத்தும் பறந்து விட்டது. அப்படி இருக்கையில், அதே பவர் சிஸ்டம் லைனை நம்பி இருப்பது எந்த நியாயம். எனவே, மாற்று திட்டத்தை அரசு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசுக்கு தேவை என்றால், நிலத்தின் வழிகாட்டி மதிப்பை ஏற்றுகின்றனர். இல்லையெனில், வழிகாட்டி மதிப்பை குறைக்கின்றனர். டாஸ்மாக் கடை போடுவதற்காக மாநில நெடுஞ்சாலையை மாவட்ட  முக்கிய சாலைகளாக  மாற்றி விட்டனர். அரசுக்கு தேவை என்றால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று நினைக்
கின்றனர். யாருமே ஒரு திட்டத்தை கேட்காத நிலையில் மக்கள் மன உளைச்சலை ஏற்படுத்த ஓரு திட்டத்தை கொண்டு வர முயல்கின்றனர். வளர்ச்சி திட்டங்கள் என்ற பெயரில் வறட்சி திட்டங்களை தான் கொண்டு வருகின்றனர். ஒரு  திட்டத்திற்காக மரங்களை எல்லாம் அழித்து மழை இல்லாத நிலை ஏற்படுத்தியுள்ளனர். ஒரு பக்கம் புயல் என்றால் மறு புறம் தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இப்போது கடும் குடிநீர் பஞ்சம் ஏற்பட தொடங்கி விட்டது.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Kerala ,Environmental Activist ,Piyush Manush , Kerala, Set up, Piyush Manush, Environmental Activist
× RELATED வெறுப்பு பேச்சு விவகாரம்; அண்ணாமலை மீது மேலும் ஒரு வழக்கு!